கொத்தமல்லியில் இத்தனை மகத்துவங்களா? |
நமது அன்றாட சமையலில் உணவை அலங்கரிக்கவும், சுவையை அதிகரிக்கவும் கொத்தமல்லி இலைகளை பயன்படுத்துவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அலங்கரிப்புக்கு மட்டுமின்றி இது உடல்நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
இதில் உள்ள மருத்துவ குணங்கள் நம் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கும் என்றே கூறலாம்.
கொத்தமல்லியின் மகத்துவங்கள்
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவை கண் நோய், விழி வெண்படல அழற்சி(conjunctivitis) எனப்படும் மெட்ராஸ் ஐ, கண் முதுமையடைதல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகின்றன.
சருமத்தில் படைநோய் இருந்தால், கொத்தமல்லி இலைகளை அரைத்து ஜூஸாக்கிக் குடிக்கவோ அல்லது அரைத்து சருமத்தின் மீதோ தடவினால், சரும பிரச்சனைகள் குணமாகும்.
கர்ப்ப காலத்தில் தண்ணீரில் ஒரு கப் கொத்தமல்லி இலைகள் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து பிறகு குளிர வைத்துக் குடித்தால் தலைச்சுற்றுதல் மற்றும் வாந்தி குறையும்.
கொத்தமல்லியில் நிறைந்துள்ள இரும்புச்சத்துகள், உடலில் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தி, அம்மை நோயின் தீவிரத்தை குறைக்கும்.
கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளதால், இது கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்கின்றது.
கொத்தமல்லி சூப்
பிரெட்டை மிக்சியில் பொடிக்கவும், அதில் 4 கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
பிறகு கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் சேர்க்கவும்.
இறுதியில் வெண்ணெயும் சேர்த்தால், அந்த கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்.
ஆனால் அதனை ரொம்பவும் கெட்டியாக விடாமல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியுடன், உப்பும் மிளகுத்தூளும் இதில் சேர்த்தால் சூடான கொத்தமல்லி சூப் தயார்.
பயன்கள்
காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த சூப் நல்ல ஆரோக்கியத்தை தரும்
இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரிமானமின்மையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை குணமாகும்.
கொத்தமல்லி கஷாயம்
கொத்தமல்லி, சீரகம், அதிமதுரம், கிராம்பு, கருஞ்சீரகம், சன்னலவங்கப்பட்டை மற்றும் சதகுப்பை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு 600 கிராம் வெள்ளை கற்கண்டை இந்த பொடியுடன் கலந்து வைத்தால் கொத்தமல்லி கஷாயம் ரெடி.
பயன்கள்
இந்த கஷாயத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரிமானமின்மை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்படும்போது இதை பித்த கிறுகிறுப்பு நீங்கிவிடும்.
|
Wednesday, November 12, 2014
கொத்தமல்லியில் இத்தனை மகத்துவங்களா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment