ஜிம் செல்லும் முன் நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது என்பது அவசியமானது.
நமது உடலை ஆரோக்கியமாக வைக்க ஜிம் செல்லும் பழக்கம் நம்மிடம் இருக்கும். அதே சமயம் அங்கு செல்வதற்கு முன் புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்து வர வேண்டும்.
ஜிம் செல்லும் முன் உடலில் கிளைகோஜன் அளவை அதிகமாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அவை குறைவாக இருந்தால், சோர்வு மற்றும் உடலின் ஆற்றலானது குறைந்துவிடும்.
எனவே ஜிம் செல்வதற்கு 1-2 மணிநேரத்திற்கு முன்பே நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து வர வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் பழங்கள்
ஒரு கிண்ணம் ஓட்ஸில் பால் மற்றும் பெர்ரிப் பழங்கள் சேர்த்து சாப்பிட வேண்டும். இது ஒரு சிறந்த உணவாகும்.
ப்ராக்கோலி ஆலிவ்
எண்ணெயில் ப்ராக்கோலியை போட்டு, சிறிது உப்பு சேர்த்து வதக்கி 1/2 கப் சாப்பிட வேண்டும்.
பிரட் மற்றும் வேர்க்கடலை
2 துண்டு கோதுமை பிரட்டில் 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை, வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட வேண்டும்.
ஆப்பிள் மற்றும் வால்நட்ஸ்
1/4 கப் ஆப்பிள் மற்றும் வால்நட்ஸை சாப்பிட வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை அளிக்கும்.
ஸ்மூத்தி
சோயா பால் கொண்டு பிடித்த பழங்களால் செய்யப்பட்ட ஃபுரூட் ஸ்மூத்தி 1 டம்ளர் குடிக்க வேண்டும்.
உலர் திராட்சை
ஒரு கையளவு உலர் திராட்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேக வைத்த முட்டை
முக்கியமாக வேக வைத்த முட்டை 1 சாப்பிட்டால் ஜிம்மில் ஏற்படும் உடல் சோர்வு குறைவாக இருக்கும்.
தயிர் மற்றும் ப்ளூபெர்ரி
1/4 கப் தயிரில் 3/4 கப் ப்ளூபெர்ரி சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும்.
வாழைப்பழம்
2 வாழைப்பழம் சாப்பிட்டு ஜிம் செல்வதும் மிகவும் சிறந்தது.
நன்றி லங்காசிறி |
Thursday, November 13, 2014
ஜிம் போறீங்களா? இதோ உங்களுக்கான உணவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment