மறைக்கப்பட்ட சொர்க்கம் |
பசுமையான நிலபரப்புடன், மிக அழகாக சுற்றுலா பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது மேகமலை. |
தேனி நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்திலிருந்து 500 மீ உயரத்தில் உள்ளது. இயற்கையான தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகமாக காணப்படும் இந்த மலைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பறவையினங்களைக் காண முடியும். மேகமலை பகுதியில் விலங்கினங்கள், ஊர்வன மற்றும் பட்டாம்பூச்சிகள் ஆகியவை உள்ளன. இந்த மலைப்பகுதிகளில் சிறுத்தைப்புலி, புலி, காட்டுப்பன்றி, நீலகிரி தார், முள்ளம்பன்றி, பறக்கும் அணில், புள்ளி மான், பழுப்பு நிற காட்டுக் கோழிகள் மற்றும் பல வகை விலங்குகளை நீங்கள் காண முடியும். தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களும் நிரம்பிய இந்த மலைப்பகுதியின் பெரும்பாலான இடங்கள் இன்னமும் யாராலும் சேதப்படாத பசுமை மாறாக் காடுகளாகவே உள்ளன. வேகமான காற்று வீசும் மலைகள் என்றும் அழைக்கப்படும் மேகமலை தான் மேகமலை நீர்வீழ்ச்சி மற்றும் சுருளி நீர்வீழ்ச்சிகளின் பிறப்பிடமாகும். மொத்தத்தில் இதனை மறைக்கப்பட்ட சொர்க்கம் என்றே சொல்லலாம். |
Thursday, November 13, 2014
மறைக்கப்பட்ட சொர்க்கம் மேகமலை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment