Thursday, November 13, 2014

இது சரியா இல்லை தவறா? நீங்களே சிந்தியுங்கள்

இது சரியா இல்லை தவறா? நீங்களே சிந்தியுங்கள்
[
ஆவின் பால் விலை உயர்வால், தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள் என்று வசனங்கள் எல்லாம் எழுந்த வண்ணம் இருந்தன.
ஆளும்கட்சி உயர்த்திய பால் விலையை, கையில் ஆயுதமாக எடுத்துக்கொண்டு, பல எதிர்கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்கள் என்ற பெயரில் பழமொழிகளை உதிர்ந்த்து வந்தன.
ஆனால், இந்த பால் விலையால் மாடு வளர்க்கும் மக்கள் எவ்வளவு பயனடைந்திருப்பார்கள் என்றால் கூட்டி பார்த்தால் லாபம் கொஞ்சமே.
ஆம்…ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இதனையும் பால் உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கைபடி உயர்த்தப்பட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது.
மாட்டுத் தீவனமான பருத்திக்கொட்டை, புண்ணாக்கு போன்றவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் தற்போது வழங்கப்படுவதில்லை.
அவற்றை தனியாரிடம் அதிக விலை கொடுத்து வாங்கும் அவலநிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு, ஆவின் பால் விலை உயர்வால், கால்நடை வியாபாரிகள் லாபம் அடைந்து விட்டார்கள் என்று சொன்னால் அது முற்றிலும் தவறாகும்.
ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.10, பயணங்களில் போது நாம் குடிக்கும் பெப்ஸி பாட்டில் 1 லிட்டர் ரூ.75 இவ்வாறு, வெறும் எனர்ஜிடிக் பானத்திற்காக இவ்வளவு தொகை செலவழிக்கும் நாம், ஏன் ஆரோக்கியம் வழங்கும் ஆவின் பால் விலையை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
ஏழைகளின் வயிற்றில் அடித்து விட்டார்கள் என்று வசனங்கள் கூறினால், அங்கு கால்நடை வியாபாரியும் ஒரு ஏழைதான்.
எதுவாயினும் காற்றைக் கூட காசு கொடுத்து வாங்கக்கூடிய நிலையில் இருக்கும் நாம், அரசியல்வாதிகள் எத்தனை எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும், ஜனநாயக நாட்டில் வசிக்கும் நாம் விழித்துக்கொண்டு உண்மை நிலைமையை அறிந்து கொள்வது அவசியம்.

No comments:

Post a Comment