ராஜராஜ சோழன் சதய விழா: பிரகதீஸ்வரருக்கு 48 வகை அபிஷேகம்!
தஞ்சாவூர்: ராஜராஜ சோழன், 1029வது ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சை பிரகதீஸ்வரருக்கு, 48 வகையான அபிஷேகம், நேற்று நடந்தது. தஞ்சையில், ராஜராஜ சோழன், 1029வது ஆண்டு சதய விழா, நேற்று முன்தினம் துவங்கியது. இதில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், திருமுறை ஓதுவார்கள் திருமுறை வாசிக்க, திருமுறைகளில் கண்ட 50க்கும் அதிகமான இசைக்கருவிகள் இசையுடன், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் இ ருந்து, பேரணி புறப்பட்டது.
தொடர்ந்து, ராஜராஜ சோழன் சிலைக்கு, சதய விழாக்குழு தலைவர் தங்கமுத்து, கலெக்டர் சுப்பையன், மேயர் சாவித்திரி ஆகியோர் மாலை அணிவித்தனர். அதன் பின், தஞ்சாவூர் பெரிய கோவில் பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு, அபிஷேகம் நடந்தது. இதில், பிம்பம் சுத்தி பலன் தரும் வில்வம், வன்னி, நொச்சி, பிச்சி, அத்தி கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலம் கொழுந்து, மாங்கொழுந்து, பலா கொழுந்து, விளா கொழுந்து, ஜெர்மன் பச்சிலை என, 10 வகை இலைகளால் அபிஷேகம் நடந்தது.
உலக வளம் வேண்டி, விபூதி அபிஷேகம், சுகம் தரும் தைலக்காப்பு அபிஷேகம், பக்தி வளரும் சாம்பிராணி அபிஷேகம், பாவத்தை போக்கும் நவகவ்ய அபிஷேகம், நன்மை தரும் திரவியப்பொடி அபிஷேகம், இன்பம் தரும் வாசனைப்பொடி அபிஷேகம், ராஜவசியம் தரும் மஞ்சள் அபி÷ ஷகம், தீர்க்க ஆயுள் கிட்ட, பஞ்சாமிர்த அபிஷேகம், சாந்த குணம் அளிக்கும் பசும்பால் அபிஷேகம், நன்மக்கள் பேறு தரும் பசுந்தயிர் அபிஷேகம், கோபத்தை போக்கும் மாதுளை அபிஷேகம், ராஜயோகம் கிடைக்கும் இளநீர் அபிஷேகம், லாபம் தரும் சோர்ணாபிஷேகம், புண்ணியம் கிடைக்க, ஸ்தல அபிஷேகம் என, 48 வகை அபிஷேகங்கள் நடந்தன. பெருந்தீப வழிபாடும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். மாலையில், மதுரையைச் சேர்ந்த கல்வெட்டு மற்றும் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், தஞ்சை மகா நந்தி ஆன்மிக சபை தலைவர் பாலசந்தர் ஆகியோருக்கு, மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment