Wednesday, November 12, 2014

காலையில் லெமன் ஜூஸ்...நன்மைகள் ஏராளம்

காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் லெமன் ஜூஸ் பருகினால் மிகவும் நல்லது என பலரும் சொல்ல கேள்விப்பட்டிருப்போம்.
அவர்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை தான்.
எலுமிச்சையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது, உடலை சிறப்பாக வைத்துக் கொள்ள இயற்கையின் வரப்பிரசாதம் எலுமிச்சை என்றே கூறலாம்.
குறிப்பாக உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் எலுமிச்சை சிறந்தது.
செரிமானத்திற்கு உதவிபுரியும்
எலுமிச்சையானது செரிமானத்திற்கு உதவி புரியும் பித்தநீரை சுரக்க உதவுகிறது, இதில் வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துக்கள் அதிகம் இருப்பதால் செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.
உடல் எடையை குறைக்கும்
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும்.
எலுமிச்சையில் உள்ள பெக்டின் என்னும் நார்ச்சத்து பசியை தூண்டாமல் இருப்பதால், உடல் எடையை குறைக்க துணை புரிகிறது.
சுத்தமான சருமம்
எலுமிச்சையானது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதால், புதிய இரத்த செல்களின் உற்பத்திற்கு உதவியாக உள்ளன.
அதிலும் தேன் கலந்து பருகுவதால் சருமம் பொலிவுடன் சுத்தமாக இருக்கும்.
நோய்களை விரட்டும்
எலுமிச்சையில் உள்ள வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் தாக்கத்திலிருந்து விடுபட வழிவகுக்கும்.
இதில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைப்பதுடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாடுடன் வைக்கிறது.
மேலும் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்படவும் வைக்கிறது.

No comments:

Post a Comment