தொப்பை குறைய சூப்பரான பயிற்சி |
இன்றைய காலக்கட்டத்தில் தொப்பை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிகம்.
இதில் ஆண்கள், பெண்கள் என எந்தவித வேற்றுமையும் இல்லை. உடலில் தேவையற்ற கொழுப்புகள் ஒன்று சேர்ந்து தொப்பையாக மாறுகிறது.
இதனால் தேவையற்ற அந்த கொழுப்பை குறைக்க உடற்பயிற்சி அவசியம். அதிலும் எளிய உடற்பயிற்சியான ஸ்கிப்பிங் பயிற்சியை தினமும் செய்து வந்தால் தொப்பை பிரச்சினை படிபடியாக குறையும். ஸ்கிப்பிங் மூலம் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
எடை குறையும்
முதலில் உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தரக் கூடியது ஸ்கிப்பிங்.
இதயம் வலுவடையும்
உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.
மனகவலை நீங்கும்
உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற கோளாறுகள் நீங்குகின்றன.
உடல் அழகு பெறும்
நல்ல மன ஒருமைப்பாட்டையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க ஸ்கிப்பிங் உதவுகிறது. மிக முக்கியமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும்.
இடுப்பு வலி தீரும்
கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது. தொடர்ச்சியான இடுப்பு வலி உள்ளவர்களுக்கு அது குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன. இரத்த ஓட்டம் சீராகிறது.
|
Wednesday, November 12, 2014
தொப்பை குறைய சூப்பரான பயிற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment